Friday, 30 December 2011

துளிகள்


மடி
சோமாவாரம், குருவாரம், செவ்வாய் வெள்ளி என
வாரத்தில் எல்லா கிழமையும்
வீடு பெருக்கி தரை துடைத்து பத்து ஏதும் இல்லாமல்
பஞ்ச பூதங்களுக்கு தீட்டு ஏது எனவும் அறியாமல்
குடிக்கும் தண்ணீரையும் மடியாயிக்கி
விரதம் பிறந்த நாள் புது வருடம் அனைத்திற்கும்
எல்லாம் புதிதாய்
நான் மட்டும் நேற்றைய நானாய்.


கற்பு
உச்சி வகிடு மறைய நீ இட்டடிருக்கும் திலஹம்
உன்னைப் பார்த்து சிரிக்கிறது ஏளனமாய்
உன்னிடம் இல்லாத ஒன்றை
இருத்திக்கொள்வதால்...

சந்தேகமில்லாமல் (சத்தியமாய்) நீ ராமன் தான்
என்னை சந்தித்தப்பிறகு.


ஓட்டம்..
சும்மாயிருப்பதே சுஹமயிருக்க
பின்னங்கால் பிடறியில் அடிக்க ஏனிந்த ஓட்டம்?


Saturday, 26 November 2011

என் வீட்டு புங்கை மரம்


துளிர்ப்பதும் பூப்பதும் பின் காய்ப்பதும்
காய்ந்தபின் உதிர்வதும் மீண்டும் துளிர்ப்பதும் என
இயந்திரமாய் என் வீட்டூ புங்கை மரம்.
உண்பதும் உறங்குவதும் குலைப்பதும்
மீண்டும் உண்பதும் உறங்குவதும் என
எப்போதும் சோம்பிக்கிடக்கும் என் வீட்டு நாய்
கூட்டலும் கழித்தலும் பெருக்கலுமாய் என் பொழுது
இதில்
இயற்கையின் நியதி மரத்துக்கும் நாய்க்கும் பொருந்தியிருக்க
நான் மட்டும் ஏன் விதிவிலக்காய்?