Tuesday, 24 October 2017

ஐப்பசியில் அடைமழை ...

அதிகாலை பயணத்தில்
படிப்பின் இடையே
அகண்ட வெளியை
வெறித்துப் பார்த்தேன்.

தாமதிக்கும்
வட கிழக்கு.

பூமியெங்கும்
மெல்லிய
புகைமண்டலமாய்
முன்பனி.

மழைத்தூறல்களினிடையே
பிசுபிசுத்த பட்டாசு
வெடித்த ஞாபகம்.

பட்டாசுபொறி
மறைத்த வெயில்
இந்த தீபாவளி

என
சில பல

மனது
கனத்தது

பொய்த்துப்போனது
அடைமொழியும்தான்.


Wednesday, 4 January 2017

ஒன்றில்லாமல் ஒன்றில்லை

இருந்தபோது
நான்
அகம்பாவம் 
ஆணவம்
பிடித்தவள்.

நான்
பேசினால்
நின்றால்
ந டந்தால்
திமிர்.

என்
உடை
நடை
பாவனை
அனைத்தும்

இல்லை  இல்லை

என்
இருத்தலே
உறுத்தலாய்.

இன்று
ஆணவம் 
கம்பீரமாகி 
அகம்பாவம்
தன்னம்பிக்கையாகி 

உருதியான
திறமையனவளாய்
நான்.


திமிர் கம்பீரம்
ஆணவம் அகம்பாவம் 
அனைத்திற்கும்
வித்யாசம்
மயிரிழையில்
உங்கள் பார்வையும்தான்.

ஒன்றில்லாமல்
ஒன்றில்லை

அடடே மனிதா

நான்
நல்லவள்
என்றுரைக்க
என்
மரணம்
அல்லவோ
தேவை. !