Wednesday, 11 May 2016

பிடிக்க மறந்து......

பிடிக்க மறந்து...

அவர்களுக்குப் பிடிக்காதென்று
அதை மறந்து
இவர்களுக்குப் பிடிக்காதென்று
இதை மறந்து,
அதுவும் இதுவும்
அவைகளாய் இவைகளாய்,
எல்லோருக்கும்
பிடித்ததாய்
இருக்க முயன்று
எனக்குப் பிடித்ததாய்
இருக்க
மறந்தேன்.