Sunday, 27 December 2015

ஒரு மழை நாள் மதியம்

                                               ஒரு மழை நாள் மதியம்

இருண்ட பகல்
வானம் மறைத்த மேகம்
மனித குரல்கள்  சில
அசரிரியாய்
எங்கோ.

இருப்பு கொள்ளாமல்
வே டிக்கை பார்க்க
இரு சக்ர வாகனங்களில்
சிலர்.

தெருவிற்குள் ஆறு
காகித கப்பல் நாட்களை
நினைவுக்கு கொண்டு வந்த
குட்டி பையன்
ரப்பர் போட்டில்.

சோவென பெய்து ஒய்ந்த
மழையின் சுவட்டில்,

என் எதிர் வீட்டு மொட்டை மாடியின் உச்சியில்
இரும்பு கம்பிகளில்
இரண்டு மணிபுறாக்கள்.

சுதந்திரமாய்.
தலையை சிலுப்பி பார்த்தன
மழையையும் மனிதர்களையும்.
வேடிக்கையாய்.




  

Friday, 5 June 2015

வெற்றிடம்

வெற்றிடம்

முகநூலில் நண்பர்கள் அநேகர்
அலைபேசியில் எண்கள் இரூநூறோ முன்னுறோ
அலுவலகத்தில் அநதரகம்  பேசி  அருகருகே சில பலர்
உற்றார்  உறவினர்
என
எனக்கு ஒரு ஆயிரமாவது உண்டு
ஆனாலும்
தவித்த நொடிகளில்
இனம்  புரியா உணர்வுகளை
இட்டு நிறப்புவதோ வெற்றிடம்

  
     


Sunday, 17 May 2015

முகங்கள்

 மறந்துபோன நினைவுகளை
மீண்டும் மீண்டும்
மீட்டுதருநின்றன, முகங்கள்.