ஒரு மழை நாள் மதியம்
இருண்ட பகல்
வானம் மறைத்த மேகம்
மனித குரல்கள் சில
அசரிரியாய்
எங்கோ.
இருப்பு கொள்ளாமல்
வே டிக்கை பார்க்க
இரு சக்ர வாகனங்களில்
சிலர்.
தெருவிற்குள் ஆறு
காகித கப்பல் நாட்களை
நினைவுக்கு கொண்டு வந்த
குட்டி பையன்
ரப்பர் போட்டில்.
சோவென பெய்து ஒய்ந்த
மழையின் சுவட்டில்,
என் எதிர் வீட்டு மொட்டை மாடியின் உச்சியில்
இரும்பு கம்பிகளில்
இரண்டு மணிபுறாக்கள்.
சுதந்திரமாய்.
தலையை சிலுப்பி பார்த்தன
மழையையும் மனிதர்களையும்.
வேடிக்கையாய்.
இருண்ட பகல்
வானம் மறைத்த மேகம்
மனித குரல்கள் சில
அசரிரியாய்
எங்கோ.
இருப்பு கொள்ளாமல்
வே டிக்கை பார்க்க
இரு சக்ர வாகனங்களில்
சிலர்.
தெருவிற்குள் ஆறு
காகித கப்பல் நாட்களை
நினைவுக்கு கொண்டு வந்த
குட்டி பையன்
ரப்பர் போட்டில்.
சோவென பெய்து ஒய்ந்த
மழையின் சுவட்டில்,
என் எதிர் வீட்டு மொட்டை மாடியின் உச்சியில்
இரும்பு கம்பிகளில்
இரண்டு மணிபுறாக்கள்.
சுதந்திரமாய்.
தலையை சிலுப்பி பார்த்தன
மழையையும் மனிதர்களையும்.
வேடிக்கையாய்.