தலைப்பிற்க்காக தமிழ்.
நீங்கள் சாம்பார் சாதம் ஆர்டர் பண்ணும்போது என்ன சைடிஷ் எதிர்பார்ப்பீர்கள்? அப்பளம், உருளை கிழங்கு, முட்டைகோஸ் பொரியல், எலுமிச்சை ஊறுகாய். இவைகளில் ஒன்றோ இரண்டோ, எதுவும் இல்லையென்றால் ஊறுகாயாவது.
இன்று அருகிலுள்ள கல்லூரியில் பணி. எனக்கு வழக்கத்திற்கு மாறாய் வேறு ஒரு இடம் செல்வது அவ்வளவாக பிடிக்காது என்றாலும், கடமையை செய்ய வேண்டிய கட்டாயம். விருப்பு வெறுப்பிற்கும், முடியும் முடியாமைக்கும் இடம் இல்லை.
இன்று வியாழக்கிழமை. காலை சாப்பாட்டிற்கு நோ. அளவிற்கு அதிகமாய் கால் வலி, கடுமையான வெயில், பசி, மூன்று மணி நேரம் நின்று கொண்டிருந்தது, அனைத்தும் ஒன்று சேர்ந்தது. சில சமயம், ஏன் கஷ்டப்படுகிரோம் என்று தெரியமலே போய்விடுகிறது. உணர்வதுக்கு நேரம் இல்லை. அல்லது, நேரம் ஒதுக்குவது இல்லை. உணர்ந்தாலும் ஒன்றும் செய்ய முடிவதில்லை பல சமயங்களில்.
சில வேலைகள், ஒருவிதமான ஆயாசத்தை தந்து விடுகின்றன. பிடிக்காத அல்லது இயலாத ஒன்றை - உடலுக்கு, மனதுக்கு, அறிவிற்கு, அல்லது ஆன்மாவிற்கு ஓவ்வாத வேலைகள் செய்யும்போது, தண்டனையாகவே மனது எண்ணுகிறது.
இறுதி தீர்ப்பு நாள் மாதிரி. தண்டைனையில் இருந்து தப்பிக்க முடியாது. தண்டனையின் தீவிரமும், கால அளவும் மாறுமே தவிர.
பேப்பர்களை கொடுத்தபிறகு, மத்திய உணவிற்கு சென்றோம். ஒரு அட்டைப்பெட்டி இருந்தது, அதில், சாப்பாட்டு பொட்டலங்கள் இருந்ததன. அருகில், சில சப்பாத்திகள் இருந்தன. நாங்கள், சப்பாத்தியை எடுத்துக்கொண்டு தொட்டுக்கொள்ள எதாவது இருக்கிறதா என்று பார்த்தோம். ஒரு பாட்டில் இருந்தது. சந்தேகத்துடன் திறந்தேன். உள்ளே தக்காளித் தொக்கு. சிறிது எடுத்துக்கொண்டு அமர்தோம். சப்பாத்தி மிருதுவாய் இருந்தது. தொக்கு கெட்டியாக இருக்கும். இன்னும் இங்கே தண்ணீர் பற்றாக்குறை இல்லை போல். பரவாயில்லையே என்று எண்ணிக்கொண்டு இருக்கும் போது, தொக்கு தீர்ந்து விட்டது. பாதி சப்பாத்தி வெறுமே சாப்பிட வேண்டியதாயிற்று. ஒரு சாப்பாட்டு பொட்டலதை பிரித்து ஆளுக்கு கொஞ்சம் எடுத்தோம். அதில் உள்ள
ஊறுகாயை எடுத்து நாக்கில் வைத்தேன். வித்யாசமான, புளி சாதத்திற்கான சுவை. அடுத்த நொடி, வேர்க்கடலை கையில் பட்டதும், சந்தேகம் தீர்ந்தது.
ஆச்சர்யம் ஆனால் உண்மை, வாழ்நாளில் முதன்முறையாக, சாம்பார் சாதத்திற்கு புளிகாச்சல் சைடிஷ்! அப்பளமும், வறுவலும், வெங்காயமும் தேடிய நாள் எங்கே? நாவுதான் எங்கே? எது எப்படியோ, பசித்த நாவிற்க்கு சாம்பார் சாதமும், புளிகாச்சலும் தேவாமிர்தம்.
ஊறுகாயை எடுத்து நாக்கில் வைத்தேன். வித்யாசமான, புளி சாதத்திற்கான சுவை. அடுத்த நொடி, வேர்க்கடலை கையில் பட்டதும், சந்தேகம் தீர்ந்தது.
ஆச்சர்யம் ஆனால் உண்மை, வாழ்நாளில் முதன்முறையாக, சாம்பார் சாதத்திற்கு புளிகாச்சல் சைடிஷ்! அப்பளமும், வறுவலும், வெங்காயமும் தேடிய நாள் எங்கே? நாவுதான் எங்கே? எது எப்படியோ, பசித்த நாவிற்க்கு சாம்பார் சாதமும், புளிகாச்சலும் தேவாமிர்தம்.
வாழ்க்கையின் புற சூழ்நிலைகள் மிகசிரமமாகவே இருந்தாலும், எதையும் யாரிடமும் சொல்லி புரியவைக்க வேண்டிய நிலையை கடந்து,மனதோ, அமைதியாக இருந்தது, அனைத்தையும் வேடிக்கைபார்த்தபடி.
No comments:
Post a Comment