விழி மூடி
மனம் குவித்து
ஓம் சக்தி
என சொல்லும்
ஒவ்வொரு முறையும்
நிழலாடுகிறது
ஒரு முகம்.
அபிராமி லலிதா
காளி மாரி
என
அறிந்த
அனைத்து ரூபங்களும்
பொருந்தா முகம்.
ஞாபக
அடுக்கின்
இறுதி வரை
சென்று திரும்பியும்
வாரா .....
நினைவலைகளை
பின்னுக்கு
தள்ளிவிட்டு
சட்டென உணர்தேன்
என் சக்திக்கு
நானே
முகம்
கொடுத்திருந்ததை.
மனம் குவித்து
ஓம் சக்தி
என சொல்லும்
ஒவ்வொரு முறையும்
நிழலாடுகிறது
ஒரு முகம்.
அபிராமி லலிதா
காளி மாரி
என
அறிந்த
அனைத்து ரூபங்களும்
பொருந்தா முகம்.
ஞாபக
அடுக்கின்
இறுதி வரை
சென்று திரும்பியும்
வாரா .....
நினைவலைகளை
பின்னுக்கு
தள்ளிவிட்டு
சட்டென உணர்தேன்
என் சக்திக்கு
நானே
முகம்
கொடுத்திருந்ததை.
No comments:
Post a Comment