Tuesday, 4 October 2016

ஜவுளி கடை பொம்மை

கருப்பு வெள்ளையாய்
சிறிதும் பெரிதுமாய்
அணிவகுப்பில்
மனித
உருவங்கள்.

வானவில் வண்ணங்களில்
உடை அணிந்து
நின்ற இடத்தில்
பேஷன் ஷோ
நித்தமும்.

தூரப் பார்வையில்
எவ்வளவு  பொம்மைகள்
என
விழி அகல
வியந்து
திரும்பிய போது
சட்டென நகர்ந்தது
ஒரு உருவம்.


No comments:

Post a Comment