நீண்ட இடைவெளிக்குப்பின் இன்று இரவு வாக்கிங் சென்றேன். இரவு நேர வாக்கிங் மனதுக்கு பிடித்தமான ஒன்று. வாக்கிங் செல்லும்போது தெருவோரம் இருக்கும் வீடுகளை பார்த்துக்கொண்டே நடந்தேன். பிரமிப்பு ஒரு பக்கம் வருத்தம் ஒரு பக்கம். பெரிய இரண்டடுக்கு மாடி வீடு அருகில் மிகச்சிரியதாய் ஒண்டுகுடித்தனம். ஒரே தெருவில் இருந்தாலும், நம் நாட்டில் வீடுகளின் அளவும் அழகும் மாறுபடும். பல வெளி நாடுகளில் ஒரே மாதிரி வடிவமைப்புடன் வரிசையாய் வீடுகள் இருக்கும். அது அங்கு உள்ள சட்டம். நம் வீடுகள் போன்றே நம் சட்டங்களும்.
சினிமாவில் மிக பிரபலமான தயாரிப்பாளரின் பெயர் தாங்கிருந்தது அந்த வீடு. வீடு என்பது சாதாரணமான ஒரு வார்த்தை, ஒரு குறியீடு. இருப்பிடம் வீடு என்றால் அது வீடுதான். மற்றபடி நம் கண்களுக்கும், நினைவிற்க்கும் பழகிப்போன ஒன்றிலிருந்து வேறுபட்ட கட்டிடம். அவர்களுக்கு அது வீடு. ஒன்றரை ஆளடி உயரம் சுற்றுச்சுவர். உள்ளே, இரண்டடுக்கு மாடி. கட்டிட அமைப்பில் சற்று வித்யாசத்தை உணர்ந்து, மறுபடி நோக்கினேன். ஜன்னல் இல்லா வீடு. பளிரென வெள்ளை நிறம் போர்த்தியபடி.
என் வீட்டை சுற்றி மரம், செடி, கொடி, சில நேரம் பராமரிப்பின்றி. நான் வீட்டிலிருந்தால் எல்லா ஜன்னல்களும் திறந்து இருக்கவேண்டும். என் அத்தை திட்டிக்கொண்டே இருப்பார், விஷ ஜந்துக்கள் (புரிகிறதா?) நடமாட்டம் இருக்கும் என. நேற்று கூட போனில் பேசும்போது சொன்னார், இரண்டு நாட்களுக்கு முன் வீட்டு வராண்டாவில் படுத்து இருந்ததது என்று. உலகத்தில் நான் பயப்படும் ஒரே விஷயம் அது ஒன்றுதான்.
மின் வெட்டு இருக்கும் நேரங்களில், கடவுள் மேல் பாரத்தை போட்டுவிட்டு எல்லா ஜன்னல்களையும் திறந்து வைத்துவிட்டுத்தான் தூங்குவேன். காற்றோட்டம் இல்லாமல் என்ன? காற்று வேறு, காற்றோட்டம் வேறு. நம்மில் பல பேருக்கு வித்யாசம் தெரிவதில்லை.
நகரத்தில், சென்னை மாநகரத்தில், விஷ ஜந்துக்கள் நடமாட்டம் இருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை அதைவிட ஆபத்தான ஜந்துக்கள் இருப்பதாலோ?
எது எப்படி இருப்பினும், ஜன்னல் இல்லா வீடு எப்படி வீடு என்ற உணர்வை தரும்? மனது அயர்ந்த நேரத்தில், துவண்ட நேரத்தில், தன்னை மறந்து நிற்க, ஒரு ஜன்னல். எதிர் வீட்டு மாடியில் அமர்ந்திருக்கும் குருவி, ஒற்றை தென்னை மரம், அதனடியில், உச்சி வெயிலில் துணி அயன் பண்ணும் அம்மா, என எதாவது ஒன்று.
உலகை உணர, அகமும் புறமும் அறிய, தன்னிலை மீள என ஜன்னல்கள் என் வீட்டில்.

Superb mam nice article .
ReplyDeleteThanks so much
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஐண்னல் தலைப்பே அருமை
ReplyDeleteநிண்டநாள் இடைவெளி
ஆனால் கருத்து பதிவு மிக நேர்த்தி
படைப்புக்கு நன்றிகள் பல