Saturday, 25 May 2019

ஜன்னலில்லா வீடு


ஜன்னல் வாயிற்படி
இவையிரண்டும்
இரு கண்ணாய் வீட்டுக்கு.

ஒன்றாவது திறந்து
ஒற்றை கண்ணாய்
வழிவிடும் காற்றுக்கு
பல வீடுகளில்.

தியானத்திலிருந்து
மீண்டு
எப்போவாவது 
திறந்து மூடும்
ஒற்றை கண்
சில வீடுகளில்

உயர்ந்த சுவற்றுடன் 
ஜன்னலில்லா
சில பெருந்தகைகள்
வீடு.

மூச்சு முட்டதோ?

காற்றாய்
புத்தி, அறிவு, ஞானம்.
காற்றே  உயிர்.   

எங்கள் வீட்டில்
இரண்டும் திறந்திருக்கும்
ஊர் உறங்கும் நேரம்
தவிர.

3 comments:

  1. நிண்டநாள் நெடும் பயணம்
    இளைபாரும் வேளையிலே கையில் ஐண்னல் ....
    என்ன ஓர் ஆச்சரியம்
    மிண்டும் ஒர் ஜெயகாந்தன்

    ReplyDelete